கிறிஸ்தவம்
ஒரு மதம் சார்ந்த முறையன்று; வாழ்வியல் முறை. குறைகளுள்ள மனித வாழ்வை வளமாக்கும் மறை.
உலக உயிர்கள் யாவும் இன்புற்றிருக்க அவையனைத்தும் ஒன்றுக்கொன்று அன்புற்றிருக்க வேண்டுமென்பதை உரக்க கூறாது; உள்ளத்துள் உணர்த்தக்கூடிய மறை.
கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதால் நடக்கின்ற அதிசயங்கள் ஏராளம் ஏராளம் என்பதைப் புரிந்து கொண்டுள்ள நாம், அவற்றை நம்முடைய வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவம் .
ஆக, புரிதலும் உணர்தலும் மிக அவசியம் .
கிறிஸ்துவத்தைப் புரிந்து கொண்டவர் தம் நடைமுறை வாழ்க்கையில் நல்லவனவற்றை உணர்ந்து நடத்தலும்; கிறிஸ்துவத்தை உணர்ந்தவர் தம் வாழ்வை நல்ல புரிதலுடன் வாழ்ந்து கடப்பதும் தான் கிறிஸ்தவம்.
கிறிஸ்துவாகவோ, கிறிஸ்துவைப் போலவோ வாழ இயலாத நாம், அவர் கற்பித்த வாழ்வியலுக்கான கட்டளைகளைக் கடைபிடிக்கும் மனிதர்களாக வாழவே முயன்று கொண்டு இருக்கிறோம்.
கிறிஸ்தவ மதத்தினருக்கு பிறந்ததாலோ அல்லது நீண்ட காலமாக கிறிஸ்தவர் என்று அழைக்கப்பட்டதாலோ மட்டும் ஒருவர் கிறிஸ்தவர் ஆகி விட இயலாது என்பதே உண்மை . வேறு மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களும் கூட கிறிஸ்தவர் என்றே அழைக்கப்படுகின்றனரே ...!
உண்மைக் கிறிஸ்தவராவதற்கு மதமாற்றம் தேவையில்லை, மனமாற்றமே மிக அவசியம்.
ஆம். மனமாற்றம் மிக அவசியம். கிறிஸ்தவ கட்டளைகளை முழுமையான புரிதலுடன் ஏற்றுக்கொண்ட மாற்றம் கொண்ட மனம் கொண்டவரே உண்மைக் கிறிஸ்தவர்.
ஆண்டாண்டு காலமாகக் கடைபிடித்து வரும் வழிபாட்டு முறைகளை செவ்வனே கடைபிடிப்பதால் மட்டும் பயனில்லை. கிறிஸ்தவ கட்டளைகளை சுயகட்டுப்பாட்டோடு கடைபிடிக்கும் தனிமனித வாழ்க்கை முறைகளாலேயே கிறிஸ்தவத்திற்கு சிறப்பு .
திசையை மட்டும் மையப்படுத்தி, திசையை நோக்கி முழங்காலிட்டு ஆண்டவரைத் தேடாமல், தாழ்விலுள்ள மனிதரை நோக்கித் திரும்பி, திக்கற்ற அண்டை அயலானை அரவணைத்தலே கிறிஸ்தவம்.
சிலையை மட்டும் மையப்படுத்தி, மனித கரங்களால் செதுக்கப்பட்ட கற்சிலையை நோக்கி கரங்குவித்து ஆண்டவரைத் தேடாமல், சிதிலமடைந்த மனித மனங்களை நோக்கித் திரும்பி, அண்டை அயலானுக்கு வாழ்வு தர கரங்களை நீட்டுவதே கிறிஸ்தவம்.
கிறிஸ்தவம் பற்றி சிறிதே அறிந்த சின்னஞ்சிறியவனாகிய நான் புரிந்து கொண்ட நற்செய்தியை பறை சாற்ற கடமைப்பட்டவனாகத் தொடர்கிறேன்...!!!
1.சிலுவை அடையாளம் வரைந்து நம்பிக்கை அறிக்கை சொல்.
2.இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்.
3.3 மங்கள வார்த்தை மன்றாட்டு சொல்.
4.மூவொரு இறைவன் புகழ் சொல்.
5.முதல் தேவ ரகசியம் சொல்லி இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்.
6.10 மங்கள வார்த்தை மன்றாட்டு சொல்.
8.ஓ ! என் இயேசுவே ! நரக நெருப்பினின்று என்னும் ஜெபம் சொல்.
9.இரண்டாம் தேவ இரகசியம் சொல்லி இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்
10.3-ம் தேவ இரகசியம் சொல்லி 9-ம் எண்படி ஜெபி.
11.4-ம் தேவ இரகசியம் சொல்லி 9-ம் எண்படி ஜெபி.
12.5-ம் தேவ இரகசியம் சொல்லி 9-ம் எண்படி ஜெபி.
13.கிருபை தபாயத்து மந்திரம் சொல்லி முடி.
சிலுவை அடையாளம்
+அர்ச்சியஷ்ட சிலுவை அடையாளத்தினாலே,
+எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்.
+ எங்கள் சர்வேசுர / பிதா / சுதன் / பரிசுத்த ஆவியின் பெயராலே.
-ஆமென்
1. நம்பிக்கை அறிக்கை.
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம்நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கு இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவமன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்த்தெழுதலை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன்.ஆமென்.
2. இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப்போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
3.மங்கள வார்த்தை மன்றாட்டு
(சிறிய மணியில் 10 முறை)
அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே, இறைவனின் தாயே. பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
4.மூவொரு இறைவன் புகழ்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
8.ஓ! என் இயேசுவே
(ஒவ்வொரு 10 அருள்நிறை சொன்னதும் திரித்துவ தோத்திரத்திற்குப்பின் இந்த ஜெபம் சொல்லவும்)
ஓ! என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்மாக்களையும் பரலோகபாதையில் நடத்தியருளும். உமது உதவி யாருக்கு அதிக தேவையோ அவர்களுக்கு விஷேசமாய் உதவியருளும்.
13.ஜெபமாலை செய்து முடித்த பிறகு ஒப்படைக்கும் முறை ஜெபம்
கிறிஸ்தவம் ஒரு மதம் சார்ந்த முறையன்று; வாழ்வியல் முறை. குறைகளுள்ள மனித வாழ்றவ வளமாக்கும் மறை.. உலக உயிர்கள் யாவும் இன்புற்ைிருக்க அறவயறனத்தும் ஒன்றுக்ககான்று அன்புற்ைிருக்க வவண்டுகமன்பறத உரக்க கூைாது; உள்ளத்துள் உணர்த்தக்கூடிய மறை. கிைிஸ்துவத்றதப் பின்பற்றுவதால் நடக்கின்ை அதிசயங்கள் ஏராளம் ஏராளம் என்பறதப் புரிந்து ககாண்டுள்ள நாம், அவற்றை நம்முறடய வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்ககாள்வவத கிைிஸ்தவம் .

112