தெரிந்து கொள்ள…

 
சிலுவையின் மேல் குறிக்கப்பட்டுள்ள INRI – என்பதன் விரிவாக்கமும் பொருளும் என்ன?பிதா, சுதன், பரிசுத்த ஆவி – என வழிபடுவதின் பொருள் என்ன? (மத்தேயு 25 / பக்கம் 51) 10: 25-33) முதல் பாவம் எது?
 
இறையாட்சிக்குரியோர் யார்? (மத்தேயு 19:13-15 / மாற்கு 10 : 13 – 15 / லூக்கா 18 : 15-17)
 
 
 
இறையாட்சிக்குட்பட இயலாதோர் யார்? (மத்தேயு 19:16-30/ மாற்கு 10:17-25/ லூக்கா 18:18-30)
சிலைகளுக்குப் படைக்கப் பெற்றதை உண்ணலாமா? (1 கொரிந்தியர் 8:1-13/ 1 கொரிந்தியர்
 
ஆமென் என்பதென் பொருள் என்ன?
 
பரிசுத்த ஆவிக்கு புறாவினை அடையாளமாகக் குறிப்பது ஏன்? உலகில் ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பல இருந்தாலும் புறாவிற்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு தன் உடலில் பித்தப்பை இல்லாத ஒரே உயிரினம் புறா, பித்தப்பை என்பது உடலில் உள்ள தேவையில்லாத, கசப்பான, பித்தமான கழிவுகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் ஒரு உறுப்பு. அவ்வகையான கசப்பு உறுப்பு இல்லாததாலே மகிமையுள்ள ஆவியானவரின் அடையாளமாக புறா அமையப்பெற்றது.
 
மேலும் உலகில் உள்ள உயினங்களிலேயே தனது குஞ்சுகளை அடைகாக்கும் பொறுப்பினை ஆண் மற்றும் பெண் புறாக்கள் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளும், தூய ஆவியாரின் சமதர்ம மன நிலையை அச்சிறிய புறா தன் நடைமுறையில் கடைபிடிப்பதாலுமே தூய ஆவியாரை அடையாளப்படுத்தும் தனிச்சிறப்பினைப் பெற்றது.
 
பிரிவினைக் கிறிஸ்தவர்கள் கூறுவது போல முழு ஞானஸ்தானம் என்பது அர்த்தமுள்ளதா?
 
பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே முழு ஞானஸ்தானம் என்பது ஆண்டவரால் இருமுறை நிகழ்த்தப்பட்டது.
 
இஸ்ரவேலரை ஆண்டவர் எகிப்திலிருந்து வழி நடத்திச் சென்றார். அத்தருணத்தில் பார்வோனின் படைகள் இஸ்ரவேலரை முறியடிக்க பின்தொடர்ந்து வருகையில், இஸ்ரவேலரைக் காக்க ஆண்டவர் செங்கடலை இரண்டாகப் பிரித்து இஸ்ரவேலரைக் கால் நடையாகக் கடக்க வைத்தார் இஸ்ரவேலரைத் தொடர்ந்து வந்த பார்வோனின் படைகள் அனைத்தையும் செங்கடலில் மூழ்கடித்து இஸ்ரவேலர் அனைவரையும் காப்பாற்றினார். அதாவது பாவிகளை மூழ்கடித்து மீட்டுக்கொண்டவர்களின் கால்கள் கூட நனையாதவாறு ஞானஸ்தானம் அளித்து மீட்படையச் செய்தார்.
 
பாவங்கள் பெருத்திருந்த காலத்தில் கலங்கமில்லாத நோவாவையும் அவர்தம் குடும்பத்தினரையும், உலகிலிருந்த உயினங்களில் ஒரு ஜோடிகளையும் தன் கட்டளை படி நோவா செய்த பேழையில் அடைத்தபின், 40 நாட்கள் தொடர் மழை பொழிய வைத்து, பாவ உலகை அழித்து மீட்டுக் கொண்டவர்கள் மீது ஒரு துளி தண்ணீர் கூட படாத நிலையில் முழு ஞானஸ்தானம் அளித்தார்.புதிய ஏற்பாட்டுக் காலத்திலோ இயேசு ஆண்டவர் யோவானால் யோர்தான் நதியில் முழுமையாக மூழ்கி ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டார்.
 
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மற்றவர்களின் கால்கள் கூட தண்ணீரால் நனையாதசூழலிலும் கூட ஞானஸ்தானம் அளித்து மீட்பளித்ததாக வேதாகமம் உரைக்கிறது. புதிய
ஏற்பாட்டுக் காலத்தில் ஞானஸ்தானத்தின் போது குருவானவரால் தெளிக்கப் படுகின்ற
தண்ணீரைப் புனிதப் படுத்தவே, முன் அடையாளமாக யோர்தான் நதியில் மூழ்கி எழுந்தார்.
 
ஆக முழு ஞானஸ்தானத்தின் போது நீர் நிலைகளில், நீர் தேக்கத்தொட்டியில் மூழ்கி எழும் சம்பிரதாயம் மனிதராலேயே உருவகப்படுத்தப் பெற்றது.
 
நற்கருணைப் பேழையினைத் தாங்கியிருக்கும் பெட்டியின் மேல் IHS எனக்குறிக்கப்பட்டுள்ளதின் அர்த்தம் என்ன?