ஜெப மாலையின் தேவரகசியங்கள்
சந்தோஷதேவ ரகசியங்கள்
(முதலாம் ஞாயிறு முதல் தவக்காலம் வரை திங்கள், வியாழன், ஞாயிறு நாட்களில்)
1.கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னது.
2.மரியாள் எலிசபத்தை சந்தித்தது.
3.இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது.
4.இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது.
5.காணாமல் போன இயேசுவை கோயிலில் கண்டது.
மகிமை தேவரகசியங்கள்
(உயிர்ப்பு விழாவிலிருந்து புதன், சனி, ஞாயிறு, நாட்களில் ஆகமனகாலம் வரை)
1.கர்த்தர் உயிர்த்தது.
2.கர்த்தர் பரலோகத்திற்கு ஆரோகணம் ஆனது.
3.தூய ஆவி அப்போஸ்தலர்கள் மீது வந்தது.
4.தேவதாய் விண்ணேற்றமானது.
5.தேவதாய்க்கு இராக்கினியாக முடி சூட்டப்பட்டது,
துக்க தேவரகசியங்கள்
(தவக்காலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில்)
1.பூங்காவில் இரத்த வியர்வை விட்டது.
2.கற்றூணில் கட்டுண்டு அடிபட்டது.
3.முள்முடி சூட்டப்பட்டது.
4,சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தது.
ஒளியின் தேவரகசியங்கள்
(வியாழக்கிழமைகளில் தியானிப்பது நல்லது. சனிக்கிழமைகளிலும் தியானிக்க திருதந்தை இரண்டாம் சின்னப்பர் அனுமதி வழங்கியுள்ளார்.)
1. யோர்தானில் இயேசுவின் திருமுழுக்கு.
2.கானாவூர் திருமணத்தில் நிகழ்ந்த இயேசுவின் முதல் அருங்குறி,
3.இயேசுவின் இறையாட்சி பற்றிய அறிவிப்பு.
4. தபோர் மலையில் நிகழ்ந்த இயேசுவின் உருமாற்றம்.
5. இயேசுவின் இறுதி உணவில் நற்கருணை ஸ்தாபித்தல்,