ஜெப மாலை ஜெபிப்பது எப்படி ?
1.சிலுவை அடையாளம் வரைந்து நம்பிக்கை அறிக்கை சொல்.
2.இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்.
3.3 மங்கள வார்த்தை மன்றாட்டு சொல்,
4.மூவொரு இறைவன் புகழ் சொல்.
5.முதல் தேவ ரகசியம் சொல்லி இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்.
6.10 மங்கள வார்த்தை மன்றாட்டு சொல்.
8.ஓ என் இயேசுவே ! நரக நெருப்பினின்று என்னும் ஜெபம் சொல்.
9.இரண்டாம் தேவ இரகசியம் சொல்லி இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் சொல்.
11.4-ம் தேவ இரகசியம் சொல்லி 9-ம் எண்படி ஜெபி.
12.5-ம் தேவ இரகசியம் சொல்லி 9-ம் எண்படி ஜெபி.
13.கிருபை தபாயத்து மந்திரம் சொல்லி முடி.
‘;42?
சிலுவை அடையாளம்
+அர்ச்சியஷ்ட சிலுவை அடையாளத்தினாலே,
+எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்.
+ எங்கள் சர்வேசுர / பிதா / சுதன் / பரிசுத்த ஆவியின் பெயராலே.
-ஆமென்
1. நம்பிக்கை அறிக்கை.
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம்நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கு இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவமன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்த்தெழுதலை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன்.ஆமென்.
2. இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயது எனப்போற்றப்பெறுக உமது ஆட்சி வருக
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்,
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
3.மங்கள வார்த்தை மன்றாட்டு (சிறிய மணியில் 10 முறை)
அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்
4.மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில்
இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக, ஆமென்.
8.ஓ! என் இயேசுவே
(ஒவ்வொரு 10 அருள்நிறை சொன்னதும் திரித்துவ தோத்திரத்திற்குப்பின் இந்த ஜெபம் சொல்லவும்) ஓ! என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும், சகல ஆத்மாக்களையும் பரலோகபாதையில் நடத்தியருளும், உமது உதவி யாருக்கு அதிக தேவையோ அவர்களுக்கு விஷேசமாய் உதவியருளும்.
13.ஜெபமாலை செய்து முடித்த பிறகு ஒப்படைக்கும் முறை
ஜெபம் தோத்திரமரி,தோத்திரமே. தேவ தோத்திரமே, அர்ச்சியஷ்ட மிக்கேலே கபிரியேலே இரபிரேலே அப்போஸ்தலரான இரயப்பரே! சின்னப்பரே! அருளப்பரே! நான் எத்தனை பாவியாக இருந்தாலும் நான் வேண்டிக் கொண்ட 53 மணி நேர ஜெபமும் நாம் ஆண்டவரிடம் அடைந்த உபகாரத்திற்கு நன்றியாகவும், நமக்கு வேண்டிய சகல உதவிகளையும் பெற்றுத்தாரும். இந்த பாவியின் தோத்திரம் ஒன்றாய் கூட்டி பரிசுத்த தேவமாதா திருப்பாதகாணிக்கையாய் வைத்து உம்மை பிரார்த்திக்கிறோம். (உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தேவதாயிடம் வேண்டிக்கொள்ளவும்)
கிருபைதயாபத்து மந்திரம்
கிருபைதயாபத்துக்கு மதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே! வாழ்க! எங்கள் சீவியமே! எங்கள் தஞ்சமே! எங்கள் மேதுரமே! வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்குக்காக வேண்டி மன்றாடுகிற தாயே! உம்முடைய தாளமுள்ள திருக்கண்களை எல்லாம் எங்கள் பேரில் திருப்பியருளும், இதனன்றியே நாங்கள் இந்த பிரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய! பிரதியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே! தயாபறியே! பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத * இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
துணை :சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்